expr:class='"loading" + data:blog.mobileClass'>

கடும் வெயில் :வாடும் ஏற்காடு

ஏற்காட்டில் கடும் வெயிலுடன்
பலத்த காற்றும் வீசி வருவதால் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால், ஏற்காடு வாசிகள் மட்டுமின்றி சுற்றுலா வருவோரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்தது. குறிப்பாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் திடீர் நீர்வீழ்ச்சிகளும் ஏற்பட்டது. 

இந்நிலையில், கடந்த இரு தினங்களாக வயில் வறுத்தெடுக்கிறது. நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில் வெயில் சுட்டெரித்தது. இதே போல், நேற்று காலை முதலே வெயில் கொளுத்தியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக 94 டிகிரி பாரன்ஹீட்டாக வெயில் பதிவான நிலையில், கோடைவாசஸ்தலமான ஏற்காட்டிலும் அதே அளவில் வெயில் கொளுத்தியது. இதனால் ஏரிப்பூங்கா, அண்ணா பூங்கா, மான் பூங்கா உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடியது. 

லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட் மற்றும் ரோஜா ரோட்டம், வியூ பாய்ண்ட் உள்ளிட்ட இடங்களில் மட்டும் ஒரு சில சுற்றுலா பயணிகளை காண முடிந்தது. காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Powered By Blogger