expr:class='"loading" + data:blog.mobileClass'>

ஜூலை 25 முதல் பி.எஸ்சி., நர்சிங் விண்ணப்ப வினியோகம் துவங்குகிறது

 பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது விதமான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், ஜூலை, 25 முதல் துவங்கும் என,
மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில்பாரா மெடிக்கல் எனப்படும்,பி.பார்ம்., - பி.எஸ்சி.நர்சிங் உள்ளிட்டஒன்பது வித மருத்துவப் படிப்புகளுக்குஅரசு கல்லுாரிகளில், 555 இடங்கள் உள்ளன. சுயநிதி கல்லுாரிகளில்பி.எஸ்சி.நர்சிங்பி.பார்ம்.,பிசியோதெரபி என்றமூன்று படிப்புகளுக்கு, 7,190இடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோகம்ஜூலை, 25ல் துவங்குகிறது.
மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்புஜூலை, 24ல் வெளியாகும். ஜூலை, 25 முதல் ஆக., 4 வரை,அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும்விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள்ஆக., 5க்குள் தேர்வுக் குழுவுக்கு வந்து சேர வேண்டும். தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்ப படிவங்களைwww.tnhealth.org மற்றும், www.tn.gov.in என்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Powered By Blogger