expr:class='"loading" + data:blog.mobileClass'>

Guru Peyarchi Palangal 2016 Kadagam

Guru Peyarchi Palangal 2016 Kadagam


ஜோதிடத்தில் பொதுவாக குருவும் சுக்கிரனும் சுப கிரகங்களாக கூறப்படுகிறார்கள். வசதி வாய்ப்புடன் வாழ்பவர்களை பார்த்து சுக்கிர தசை அடிக்கிறது என்பார்கள். சுக்கிரன் தனி மனித செல்வத்திற்க்கு காரகர் குரு பொது செல்வத்திற்க்கு காரகர் எனவே குரு பெயர்ச்சி எல்லோராலும் எதிர்பார்க்கும் தன்மையுடையதாகிறது.

குரு பகவான் கொடுக்கும் பலன்களைத் தெரிந்து கொள்வோம். குரு பகவான் தெய்வீக அறிவுக்கும் வேதாந்த ஞானத்திற்கும், செல்வ வளத்திற்க்கும் பொருள் சேமிப்பிற்கும் சகல சௌபாக்கியத்திற்க்கும் புத்திர பாக்கியத்திற்க்கும் அன்பிற்கும் பண்பிற்கும் காரகராகவும் ஓளிபடைத்த மேதைகளையும், ஞானிகளையும் உருவாக்குபவராகவும் தலைவணங்காத தலைமைப் பதவியைத் தந்திடுவார். மாபெரும் சாதனைகளைச் செய்ய வைத்து மனிதனை மாணிக்கமாக திகழ வைப்பார். நாட்டை ஆளவைப்பார், நல்லோருடன் சேர வைப்பார். புது புது உத்திகளைக் காண வைப்பார் ஆன்மீக சுகத்திற்கு காரகராகவும் திகழ்கிறார். புத்திரகாரகன் என்பதால் ஐந்தாம் வீட்டில் குரு இருந்தால் புத்திரர்களால் கஷ்டத்தையும் உருவாக்குவார்.
Guru Peyarchi Palangal
குரு ஜாதகத்தில் பலம் பெற்றிருந்து இவரது திசை இளமையில் வந்தால் கல்வியில் முதன்மை நிலை உண்டாகும். நடு வயதில் வந்தால் சகல பாக்கியங்களும் ஏற்படும். இறுதிப்பகுதியில் வந்தால் சந்ததிகள் செழிப்பார்கள். கோசாரத்தில் குரு இருக்கும் ஸ்தானத்திற்கு ஐந்தில் சூரியன் வரும் பொழுது வக்கிர கதி ஏற்படும். ஒன்பதில் வரும் பொழுது வக்ர நிவர்த்தி ஏற்படும்.
ஜாதகர் பிறக்கும் பொழுது குரு வக்கிரத்தில் இருந்தால் குரு வக்கிரம் அடையும் பொழுது அதிக நன்மைகளை ஏற்படும். பொதுவாக குரு இருக்கும் இடம் கெட்டுப்போகும், பார்க்கும் இடங்கள் பலம் பெறும். சனி இருக்கும் இடம் பலம் பெறும், பார்க்கும் இடம் கெடும்.
பொதுவாக ஜனன லக்கினம், சந்திரன் இருக்கும் ராசி, ஜாதகத்தில் குரு இருக்கும் இடத்தில் இருந்து 2-5-7-9-11 ஆகிய இடங்களில் கோசாரத்தில் குரு வந்தால் யோகம் தரும். பிற ஸ்தானங்களான 1-3-4-6-8-10-12 ஆகிய ஸ்தானங்களில் குரு வரும் போது தீய பலனைத் தருவார் என்பது நூல்களின் கருத்து.
குரு பார்வை படும் ஸ்தானங்கள் பலம் பெரும். குரு தான் இருக்கும் ஸ்தானங்களிலிருந்து ஐந்து,ஏழு மற்றும் ஒன்பது ஆகிய ஸ்தானங்களைப் பார்வையிடுவார். குரு சிம்மத்திலிருந்து ஐந்தாம் பார்வையாக தனுசு ராசியையும் ஏழாம் பார்வையாக கும்பம் ராசியையும் ஒன்பதாம் பார்வையாக மேஷம் ராசியையும் பார்வையிடுகிறார்.


நல்ல பலன் அடையும் ராசிகள்
மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம்


தீய பலன் அடையும் ராசிகள்
ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம்

Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Powered By Blogger