கொடிவேரி அணையில் அருவி போல
கொட்டும் தண்ணீரில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுகிறது. சுற்றுலா தலமாக கொடிவேரி அணை விளங்கி வருகிறது.
நேற்று ஆடிபெருக்கு பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர்,கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வருகை தந்தனர். குடும்பத்துடன் அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள், அணையில் இருந்து அருவி போல கொட்டும் தண்ணீரில் குளித்தும், பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடியும் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடினர். சுற்றுலா பயணிகளின் வருகையையொட்டி பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

0 comments:
Post a Comment