expr:class='"loading" + data:blog.mobileClass'>

தனியார் தலையீட்டால் வில்லங்க சான்று வழங்கும் பணியில் இரண்டு கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது

'ஆன்லைன்' முறையில் வில்லங்க சான்று வழங்கும் பணியில், தனியார் தலையீட்டால், இரண்டு கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக, பதிவுத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சொத்து பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை பதிவு செய்வோர், அது தொடர்பான முந்தைய பதிவு விவரங்களை சரிபார்க்க, வில்லங்க சான்று பெற வேண்டும்.
சார் - பதிவாளர் அலுவலகங்களில் மக்கள் நேரடியாக விண்ணப்பித்து, வில்லங்க சான்று பெறலாம்.
இதற்கான நடைமுறையில் தரகர்கள் தலையீட்டால், ஒவ்வொரு வில்லங்க

சான்றுக்கும், மக்கள், 500 ரூபாய் வரை கூடுதல் செலவு செய்ய வேண்டி உள்ளது.
'ஆன்லைன்' முறையில்:இதனால், பதிவுத்துறை இணையதளத்தில் மக்கள்விண்ணப்பித்து, ஆன்லைன் முறையில் வில்லங்க சான்று பெறும் வசதி துவக்கப்பட்டது. இதற்காக, வட சென்னையில், 'ரெஜிநெட்' என்ற மையம் உள்ளது. விண்ணப்பத்தை பரிசீலித்து, வில்லங்க சான்று வழங்கும் பணி, ஒப்பந்த நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் வில்லங்க சான்று வினியோகம் செய்வது குறித்த கணக்குகளை ஆய்வு செய்த பதிவுத்துறை அதிகாரிகள், அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
மோசடி :இதுகுறித்து,பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆன்லைன் விண்ணப்பங்கள் அடிப்படையில் வில்லங்க சான்று பிரதிகளை அனுப்பும் பணியில், ஏழு ஆண்டுகளாகஒரே நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.இந்த நிறுவனம், மாதம், 200 முதல் 300 வில்லங்க சான்றுகளை மட்டுமே வழங்கப்பட்டுவதாக கணக்கு காட்டுகிறது. ஆனால், ஒரு மாதத்தில், 2,000 வில்லங்க சான்றுகள் வழங்கப்பட்டதும்,

அந்த வகையில் பதிவுத்துறைக்கு கட்டணமாக கிடைக்க வேண்டிய, இரண்டு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த, பதிவுத்துறை தலைமையகத்திடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Powered By Blogger