மாயமான விமானத்தை தேடும் பணி 4-வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது, விமானத்தின் பாகமோ, வீரர்களோ தென்படவில்லை என்று கடலோர பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானில் உள்ள போர்ட்பிளேர் நகருக்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு 29 பேருடன் புறப்பட்டு சென்ற ஏ.என்–32 ரக ராணுவ சரக்கு விமானம் திடீரென்று மாயமாகிவிட்டது. விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படை விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது
இந்நிலையில் கடலோர பாதுகாப்பு படை ஐஜி ராஜன்பர்கோத்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில், மாயமான விமானத்தின் பாகமோ, வீரர்களோ இதுவரையில் தென்படவில்லை. விமானத்தை தேடும் பணி தொடர்ந்து 4-வது நாளாக நீடிக்கிறது. கடலில் எதுவும் கிடைக்காததால் தேடும் பகுதியை விரிவுபடுத்திஉள்ளோம். விமானத்தை தேடும் பணிக்கு இஸ்ரோ, என்.ஐ.ஒ.டி. உள்ளிட்ட அரசு அமைப்புகள் உதவிசெய்து வருகின்றன,” என்று கூறிஉள்ளார்..

0 comments:
Post a Comment