expr:class='"loading" + data:blog.mobileClass'>

நல்ல உடல் நலத்துடன் இருக்க இந்த ஜூஸ் குடியுங்கள்

சாப்பிட வேண்டுமென தோன்றினால் உடனே பீஸா, ஃப்ரை சிப்ஸ், போன்ற மசால
உணவுகளைத்தான் ஆர்டர் செய்து சாப்பிடுவோம். உங்களுக்கு அவை ஆரோக்கியமற்றது என தெரிந்தும் சாப்பிடுகிறீர்களென்றால் உங்களை உங்களுக்கே பிடிக்கவில்லையென்று அர்த்தம்.
இந்த ஆரோக்கிய சாறுகளை குடித்தால், நீங்களே மசாலா உணவுகளை சாப்பிட வேண்டாம் என ஒதுக்கி வைத்திடுவீர்கள்.

பாவக்காய் சாறு:
இதனை கரேலா சாறு என வட மா நிலங்களில் குறிப்பிடுவதுண்டு. இதனை விதை நீக்கி சாறாக செய்து, இதில் வெல்லம், அல்லது தேன் கலந்து சாப்பிடலாம்.
இதனை வாரம் ஒருமுறை சாப்பிடால் எல்லாவித கல்லீரல் நோய்களும் குணமாகும். சிறு நீரக கற்கள் கரையும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படோடு இருக்கும்.
புற்று நோயாளிகளுக்கு, புற்று நோய் செல்கள் பெருகாமல் தடுக்கும். மேலும் பலவிதமான் அபுற்று நோய்கள் வராமல் காக்கும். சரும நோய்கள் நெருங்காது.

சுரைக்காய் ஜூஸ்:
சுரைக்காய் அதிக நார்சத்து கொண்டுள்ளது. இது கர்ப்பப்பையை பலப்படுத்தும். கர்ப்பப்பை சம்பந்தமான வியாதிகளுக்கு தீர்வு தரும். உடல் எடையை குறைக்க வேண்டுமென நினைப்பவர்களுக்கு இது அற்புதமான ஜூசாகும். இவை அதிக நீர்சத்துக் கொண்டுள்ளது.
கணிசமான உடல் எடையை குறிக்கும்.கல்லீரலுக்கு உகந்தது. சிறு நீரகத் தோற்று இருப்பவர்கள் இந்த ஜூஸை குடித்தால், தொற்று குணமாகிவிடும். மலச்சிக்கல் வராது.

நெல்லிக்காய் சாறு:
அதியமான் இளமையாக இருக்கவேண்டுமென அவ்வை கொடுத்த நெல்லிக்கனியை எளிதில் மறக்க முடியாது. சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற நெல்லிக்காய் அவ்வளவு விசேஷமானது.
இது ஜீரண சக்தியை மேம்படுத்தும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். வைரல் தொற்று நோய்களை அண்ட விடாது. சுவாசப்பாதையை சீர்படுத்தும். இதனால் ஆஸ்துமா கட்டுப்படும். நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். மலச்சிக்கலை குணப்படுத்தும். வாயுவை தடுக்கும்.கண் பார்வையை அதிகப்படுத்தும்.
கூந்தலை நீண்டு வளரச் செய்யும்.இதனை ஊறுகாயாகவும், துவையலாகவும் சாப்பிடுவதுண்டு. ஆனால் நெல்லிக்காய் ஜூஸாக வாரம் இருமுறை சாப்பிட்டு வாருங்கள். உடல் உள்உறுப்புகள் எந்த வித பாதிப்பின்றி ஆரோக்கியமுடன் இருக்கும்.

சோற்றுக் கற்றாழை ஜூஸ்:
சோற்றுக் கற்றாழை வயிற்றுக்கு நிறைய நன்மைகள் தருபவை. அல்சரை குணமாக்கும். வயிற்று புண்களை ஆற்றும். ஜீரண சக்தியை தரும் சிறந்த ஆயுர்வேத மூலிகை இது.
நெஞ்செரிச்சலை குறைக்கும். செல்களை உடையச் செய்யும் ஃப்ரீ ரேடிகல்ஸை அழிக்கும். புற்று நோயை தடுக்கும். இதில் விட்டமின் பி, சி, ஈ ஆகியவை உள்ளது. சர்க்கரைவியாதி உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.

Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Powered By Blogger