expr:class='"loading" + data:blog.mobileClass'>

கனமழை காரனமாக சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளது

சீனாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின்
எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளது.சீனாவின் ஹுபே, ஸிங்ஜிங், ஷாங்ஸி உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 225-ஆக அதிகரித்துள்ளது. 3.10 லட்சம் பேர் தங்களது வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.ஹுபே மாகாணத்தில் வெள்ளிக்கிழமை பெய்த மழையில் சிக்கி 105 பேர் உயிரிழந்தனர். மேலும், 104 பேரைக் காணவில்லை.சீனாவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழைக்கு 42 பேர் பலியாகினர். மேலும், 74 பேரைக் காணவில்லை.

Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Powered By Blogger