expr:class='"loading" + data:blog.mobileClass'>

20 அடி பள்ளத்துக்குள் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

காஞ்சிபுரம் அருகே 20 அடி பள்ளத்துக்குள் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்
ஒருவர் உயிரிழந்தார். 30 பேர் காயம் அடைந்தனர்.

55 பயணிகளுடன் காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து தேசிய நெடுஞ்சாலையான வாலாஜாபாத் அடுத்து உள்ள தாழம்பேடு அருகே உள்ள மேம்பாலத்திற்கு முன்பாக வளைவில் திரும்பிய போது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையின் மறுபுறம் இருந்த 20 அடி பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான
து.

இதில் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பயணிகளை மீட்டு செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த காஞ்சிபுரம் ஆட்சியர் கஜலெட்சுமி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முத்துலட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். பஸ் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.

நள்ளிரவில் ஏற்பட்ட இந்த கோர விபத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றமும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Powered By Blogger